தித்திக்கும் சுவையில் ஓட்ஸ் கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Summary: குழந்தைகளுக்கு இது போன்று ஓட்ஸ் கேசரி செய்து கொடுத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எப்பொழுதும் வீட்டில் நலக்காரியங்களுக்கு ஸ்வீட் செய்வது வழக்கம் தான் ஆனால் எப்பொழுதும் செய்வது போல் ரவை கேசரி செய்யாமல் இது போன்று ஓட்ஸ் கேசரி செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனி.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் ஓட்ஸ்
  • சீனி
  • ½ கப் நெய்
  • ½ டீஸ்பூன் ஏலக்காய் பொடி
  • கேசரி கலர்
  • விரும்பிய நட்ஸ்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் கடாயில் ஓட்ஸை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
  3. வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
  4. கடைசியாக சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் நெயில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கவும்.