மாலை நேரத்தில் சாப்பிட வெண்டைக்காய் பக்கோடா இப்படி செய்து பாருங்க!

Summary: குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஈவினிங் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட வெண்டைக்காய் பகோடா இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 200 கிராம் வெண்டைக்காய்
  • 1 வெங்காயம்
  • 1 கப் கடலை மாவு
  • ½ கப் கார்ன்ப்ளவர் மாவு
  • 10 முந்திரி பருப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயத்தை நீல வாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. வெண்டைக்காயை விருப்பம் போல் நறுக்கிக்கொள்ளவும். அல்லது வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. அடுத்து ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெண்டைக்காய் போட்டு அத்துடன் நறுக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சேர்த்து முதலில் நன்கு பிசைந்துகொள்ளவும். அடுத்து அத்துடன் கடலை மாவு, சோள மாவு, சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும். அதனை ½ மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  4. பிறகு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும்.