மதிய உணவுக்கு ஏற்ற ருசியான காளிஃப்ளவர் கிரேவி இப்படி செய்து பாருங்க!

Summary: உங்களுக்கு காளிஃப்ளவர் ரொம்ப பிடிக்குமா? அப்போ இது போன்று ஒரு முறை காளிஃப்ளவர் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கிரேவி செய்து சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையான சுவையில் இருக்கும்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 காளிஃப்ளவர்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • மிளகாய் தூள்
  • 2 ஏலக்காய்
  • 2 பட்டை
  • 2 இலவங்கம்
  • ½ சோம்பு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • புதினா, கொத்தமல்லி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில், வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி, புதினா அனைத்தையும் மிக்சியில் சேர்த்து விழுதாகவும்.
  2. அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  3. எண்ணெய் பிரியும் போது சுத்தம் செய்து நறுக்கிய காளிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு பொடித்த மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து அத்துடன் தண்ணீர் தெளித்தது வேக விடவும்.
  5. காளிஃப்ளவர் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.