ருசியான கேரளா சின்னமுள்ளன் மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட ஏற்றது!

Summary: கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவின் உணவு வகைகளுக்குத் தனி வரலாறு உண்டு. அதிலும் கேரளா மாநிலத்தின் வட்டார உணவுகள் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. நெய் சோறு, புட்டு, கடலைக் கறி, செம்மீன், மீன் பொளிச்சது, அடைப் பிரதமன், மலபார் மீன் குழம்பு, மீன் கறி, அப்பம் போன்ற ஏராளமான கேரளா உணவுகள் உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல உணவுகளாக இருந்து வருகின்றன. கேரளாவில் கடற்கரை அதிகம் இருப்பதால் மீன் உணவுகள் அவர்களின் பிரதான உணவு பட்டியலில் இடம் பிடிக்கின்றன. கேரளாவில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் அசைவ உணவுகளில் மீன் தவிர்க்க முடியாத ஒன்று.

Ingredients:

  • 1/2 கிலோ சின்ன முள்ளன் மீன்
  • புளி
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 6 சின்ன
  • 1/2 கப் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 6 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 மண்சட்டி
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் முள்ளன் மீனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. புளியை வெந்நீரில் ஊறப்போடவும். புளியைக் கரைத்துதண்ணீரை வடிகட்டிஎடுத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் சட்டியை காய வைத்து அதில் புளி கரைசலை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.அதில் 2ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  4. தேங்காய், வெங்காயம்,சிறிது சீரகம்சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். அதையும் சேர்த்துக்கொள்ளவும்.
  5. 2 பச்சை மிளகாய் சேர்க்கவும். குழம்பை நன்கு கொதிக்கவிடவும். பிறகு சுத்தம் பண்ணிய முள்ளன் மீன்களை குழம்பில் சேர்க்கவும். விரைவில் குழம்பில் மீன்வெந்து விடும்.
  6. பின்வேறு பாத்திரத்தில் 6 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து குழம்பில் ஊற்றவும்.
  7. ஒரு கொதி கொதித்து எண்ணெய் மேலே பளபள வென்று வரும் போது அடுப்பை அணைத்து விடவும். சின்ன முள்ளன் மீன் குழம்பு ரெடி.