ருசியான மொச்சை வடை இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக் இருக்கும்!

Summary: குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஈவினிங் டீ, காபியுடன் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீங்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. சட்டுனு இது போன்று ஒரு முறை மொச்சை வடை செய்து சுட சுட வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.இந்த வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ½ கப் பெரிய மொச்சை
  • 1 வெங்காயம்
  • 1 வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 2 பச்சைமிளகாய்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் சோம்பு தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. மொச்சையை 10 மணிநேரம் ஊரவைக்கவேண்டும்.
  2. ஊறியதும் அதனை மிக்சியில் சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
  3. அரைத்த கலவையுடன், வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசிக்கவும்.
  4. பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், சோம்பு தூள், சோள மாவு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
  5. அடுத்து கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்த மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
  6. இப்பொழுது சுவையான மொச்சை வடை தயார்.