ருசியான கம்பு பீட்ரூட் பனியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: ஸ்வீட் வகைகள் என்றாலே குழந்தைகளை முதலில் கவர்வது அதன் வண்ணம் தான். அதன் பிறகுதான் சுவை. ஆனால் கண்ணை கவரும் வண்ணத்தோடு சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்து இருந்தால் நாமும் திருப்தியோடு செய்து கொடுக்கலாம் அல்லவா. குழி பணியாரம் ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டியாகும், இது பெரும்பாலும் காலை உணவு அல்லது மாலை டிஃபனுக்கு வழங்கப்படும்.

Ingredients:

  • 1/4 கப் பச்சரிசி
  • 1/4 கப் கம்பு
  • 1/4 கப் இட்லி அரிசி
  • 1/4 கப் உளுந்து
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • கடுகு
  • கடலை பருப்பு
  • எண்ணெய்
  • சீரகம்
  • 1/2 கப் துருவிய பீட்ரூட்
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் ஆகிய இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் ஊற வைக்கவும்.
  2. பின்னர் ஊற வைத்தக் கலவையை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்தக் கலவையை சுமார் 6 மணி நேரம் நன்கு புளிக்கவிடவும்.
  3. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கடுகு, கடலைப் பருப்பு, சீரகம்,பீட்ரூட், பச்சைமிளகாய் ஆகிய இவை அனைத்தையும் தாளித்துக் கொண்டு அதனை மேற்கண்ட மாவுடன் கலக்கவும்.
  4. தீயிலிருந்து இறக்கி தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும். இந்தக் கலவையை இட்லி மாவில் கலக்கவும்.
  5. பணியாரம் கடாயை மிதமான சூட்டில் சூடாக்கவும். கடாயின் ஒவ்வொரு குழியிலும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் மாவை துவாரங்களில் ஊற்றவும்.
  6. கடாயை ஒரு மூடியுடன் மூடி, சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் சமைக்கவும். பணியாரத்தை புரட்டி மறுபுறமும் வேக வைக்கவும். இந்த உணவில் புரதம் நிறைந்துள்ளது.