அரேபியன், ஈராக் ஸ்டைல் ருசியான மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு மீன் வறுவல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்போ இது போன்று அரேபியன் ஸ்டைலில் ஒரு முறை மீன் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 5 துண்டுகள் மீன்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில். உப்பு, மஞ்சள் தூள் தூவி நன்றாக பிரட்டி வைக்கவும்.
  2. பின்னர் மீனின் மீது கோதுமை மாவு தூவவும்.
  3. இப்படி ஒவொரு மீனிலும் தூவி, அதை ஒரு தட்டில் வைத்து 10 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
  4. அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீனை ஒவொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். எளிமையாக செய்யக்கூடிய அரேபியன் மீன் வறுவல் தயார்.