தித்திக்கும் சுவையில் சாக்லேட் தேங்காய் பர்பி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Summary: சிறுவயதில் நாம் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிட்ட தேங்காய் பர்ஃபியை, இப்போது கடைகளுக்குச் சென்று கேட்டால் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அந்த அளவில் அது மிகவும் அரிதாகவே கிடைக்கும். ஆனால் அந்த தேங்காய் பர்ஃபியை கடைக்கு எல்லாம் செல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம். அதிலும் மாலை வேளையில் இதனை செய்தால், வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா!

Ingredients:

  • 2 கப் தேங்காய்
  • 1 3/4 கப் சர்க்கரை
  • 3/4 கப் காய்ச்சிய பால்
  • 4 டீஸ்பூன் கோகோ பவுடர்
  • 100 கிராம் துருவிய சாக்லேட்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  • 1 டீஸ்பூன் நெய்
  • 10 பிஸ்தா
  • 1/2 சிட்டிகை உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய தட்டு
  • 1 கரண்டி

Steps:

  1. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சர்க்கரை இரண்டையும் போட்டு நன்கு அரைக்கவும்.
  2. பின்னர் அடி கனமான கடாயில், அரைத்த விழுதுடன்,பாலை சேர்க்கவும்.
  3. அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி உப்பு சேர்த்து, கோக்கோ பவுடரை கட்டியில்லாமல், பாலில் கரைத்து ஊற்றவும்.
  4. பின்பு ஏலக்காய்த்தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும். அது சிறிது கெட்டியானதும் நெய் விட்டு நன்கு கிண்டவும்.
  5. ஒன்று சேர கெட்டியாகி ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.ஒரு தட்டில் நெய் தடவிக் கொள்ளவும்.
  6. பின் கலவையை தட்டில் கொட்டி ஆறினதும் கீறல்கள் போடவும்.
  7. தட்டின் ஓரங்களில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.இப்போது மிகவும் சுவையான, சுலபமான தேங்காய், சாக்லேட் பர்பி தயார்.
  8. இதன் மேல் சாக்லெட் தூவவும். பிறகு இதன் மேல் பிஸ்தாவை நறுக்கி சேர்த்து அலங்கரிக்கவும்.