ருசியான பட்டை அவரை பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Summary: பட்டை அவரைக்காய் பொரியல் இனி இப்படி செய்து சுட சுட சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 250 கிராம் பட்டை அவரைக்காய்
  • 8 சின்ன வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • உப்பு
  • மிளகாய் தூள்
  • கொத்தமல்லி தழை
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். அடுத்து துவரம் பருப்பை ½ மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  2. அவரைக்காய் நறுக்கி குக்கரில் சேர்த்து துவரம் பருப்பை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த அவரைக்காயை போட்டு தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்.
  5. தண்ணீர் வற்றியதும் அதில் தேவையான அளவு உப்பு, தேவைக்கேற்ப மிளகாய் தூள், சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வைக்கவும்.
  6. பின்பு வேக வைத்த துவரம் பருப்பை அதில் சேர்க்கவும். அடுத்து தேங்காய் துருவல் சேர்த்து பச்சை வாசனை போக மெதுவாக வதக்கவும்.
  7. கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.