ருசியான தேங்காய் பால் சாதம் இனி இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!

Summary: குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் லன்ச் என்ன செய்து கொடுக்கலாம் என்று கோசிக்கீறிர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு தேங்காய் பால் சாதம் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1½ கப் தேங்காய் பால்
  • கருவேப்பிலை
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • நெய்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • பாத்திரம்

Steps:

  1. முதலில் தேவையான பொருட்களை அனைத்தும் தயாராக எடுத்துக்கொள்ளவும்.
  2. அரிசியை 30 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து அடுப்பில் சட்டியை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்பு ஊறவைத்த அரிசியை பூட்டு கிண்டவும்.
  5. அடுத்து தேங்காய் பாலை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு மிதமான தீயில் வேக விடவும்.
  6. சாதத்தில் உள்ள பால் வற்றி மேலே சாதம் தெரியும் போது தீயை சிறிதாக்கி பேப்பரை போட்டு மூடி 15 நிமிடம் தம்மில் விடவும்.
  7. 15 நிமிடம் கழித்து இறக்கவும். இப்பொழுது சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.