ருசியான முட்டைக்கோஸ் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க ?

Summary: நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய முட்டைகோஸ் மசாலா தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாங்கி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 பெரிய பவுள் தோசை மாவு
  • எண்ணெய்
  • ¼ KG துருவிய முட்டைக்கோஸ்
  • 6 வர மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tsp உளுந்த பருப்பு
  • 2 தக்காளி
  • உப்பு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம்பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
  2. அதன் பின் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இதனுடன் நறுக்கிய தக்காளி தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும்.
  3. அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி தூள் போன்ற பொருட்களை சேர்த்து கிளறவும். பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கி வந்தவுடன்.
  4. இதனுடன் துருவிய முட்டைகோஸ், உப்பு மற்றும் கொத்தமல்லி, சேர்த்து வதக்கவும். பின் முட்டைக்கோஸ் நன்கு மென்மையாக வதங்கி வந்தவுடன் கடாயை குளிர வைத்து கொள்ளவும்.
  5. பின் வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியான பதத்திற்கு அரைத்து முட்டைகோஸ் மசலா தயார்
  6. பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, தோசை மாவை மெல்லியதாக ஊற்று, முட்டைகோஸ் மசாலாவை அதன்மேல் தடவி தோசையை வேக வைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான முட்டைகோஸ் தோசை தயார்.