உடனடி ராகி தோசை இப்படி ஒரு தடவை செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: உங்கள் வீட்டில் இட்லி, தோசை மாவு இல்லை என்று இனி கவலை வேண்டாம். ராகி மாவு வைத்து உடனடியாக சுவையான ராகி தோசை செய்து விடலாம். இதனுடன் தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது வாரத்தில் ஒரு முறை காலை உணவாக சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.இனி இட்லி மாவு இல்லை என்று கடைகளில் போய் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்று ராகி தோசை செய்து ருசித்திடுகள்.

Ingredients:

  • ½ கப் சிவப்பு அவுல்
  • 1 கப் கேழ்வரகு மாவு
  • ½ கப் மோர்
  • உப்பு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்சி
  • 1 தோசைக்கல்

Steps:

  1. முதலில் சிவப்பு அவுல் தண்ணீரால் கழுவி ஒரு கப் தண்ணீரில் 3 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
  2. ஒரு மிக்சியில் ஊறவைத்த அவுலை சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் கேழ்வரகு மாவு, மோர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  3. தோசைமாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். மாவு தண்ணியாக இருந்தால் ½ கப் அளவிற்கு கெளவரகு மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
  4. அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை போல் ஊற்றி அதன் மேல் நறுக்கிய வெங்காயம் கொஞ்சம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப்போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  5. இப்பொழுது சுவையான ராகி தோசை ரெடி.