ருசியான பலாக்காய் கோலா உருண்டை இப்படி செய்து பாருங்க! அசத்தலாக இருக்கும்!

Summary: கோலா உருண்டை என்பது மட்டன் கீமாவை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பரம்பரியமான செட்டிநாடு உணவாகும். மொறுகளான இந்த உருண்டையை வாயில் போட்டவுடனே பூண்டு, சோம்பு என உருண்டையில் சேர்க்கபட்டுள்ள மசாலா பொருட்களின் சுவையை தனித்தனியாக உணரலாம். மட்டன் கீமாவிற்கு பதிலாக வாழைக்காயை வைத்தும் கோலா உருண்டை செய்யலாம்.

Ingredients:

  • 250 கிராம் பலாக்காய்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 50 கிராம் பொட்டுக்கடலை
  • 2 டீஸ்பூன் கசகசா
  • 1 துண்டு பட்டை
  • 6 சின்ன
  • 1 பச்சை மிளகாய்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • கறிவேப்பிலை
  • 4 டீஸ்பூன் அரிசி
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. பலாக்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், போட்டு வெட்டி வைத்துள்ள பலாக்காய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  3. பலாக்காய், வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, தேவையான உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
  4. வதக்கிய பொருட்களை ஆறவிடவும் அவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் இரு நிமிடம் அரைக்கவும்.
  5. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அரைத்த கலவையை உப்பு காரம் சரி பார்த்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காயவைத்து காய்ந்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும்.
  7. அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு புறமும் சிவக்க வறுத்தெடுக்கவும் பிலாமூசு கோலா உருண்டை ரெடி.