ருசியான மாதுளை ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

Summary: தென்னிந்திய மதிய உணவு மெனுவில் ரசம் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். உண்மையான செய்முறையில் ரசம் பொடி பயன்படுத்தப்படுகிறது ஆனால் கூடுதல் சுவைக்காக புதிதாக அரைத்த மசாலாவைப் பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும். மாதுளை ரசம் இனிப்பு, கசப்பு மற்றும் காரமான சுவை கொண்டது மற்றும் முற்றிலும் தவிர்க்க முடியாத மிகவும் சுவையான ரசம்.

Ingredients:

  • புளி
  • 1 கப் மாதுளை முத்துக்கள்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 8 பல் பூண்டு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயம்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 சிட்டிகை உப்பு
  • தண்ணீர்
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்த பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் சீரகம், மிளகு, பூண்டு இடித்துக் கொள்ளவும். மாதுளையை அரைத்து மாதுளை ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
  2. புளியை ஊறவைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. கரைத்த புளி கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, இடித்த மிளகு சீரகம் பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளால் நன்றாக கரைத்து விடவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சீரகம் தாளித்து கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி எடுத்த மாதுளை ஜூஸையும் ஊற்றி நுரை கட்டி வரும்போது இறக்கி விடவும்.
  5. கொதிக்க விடக்கூடாது. அதில் சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். மாதுளை ரசம் ரெடி.