ருசியான பலாக்கொட்டை சொதி குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: சோதி என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு காய்கறி குண்டு ஆகும். கலவையான காய்கறிகள் மெல்லிய தேங்காய்ப் பாலுடன் பச்சைமிளகாய்-இஞ்சி விழுதில் சமைத்து, பின்னர் கெட்டியான தேங்காய்ப் பாலுடன் சமைத்த மூங் பருப்புடன் செறிவூட்டப்படுகிறது. இறுதியாக எலுமிச்சை சாறு பயன்படுத்த படுகிறது. திருநெல்வேலியில், குறிப்பாக திருமணங்களின் போது, ​​இந்த சுவையான சோதி சூடான சாதத்துடன் பரிமாறப்படுகிறது. இது "மாப்பிள்ளை சோதி" என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்பம் , இடியப்பம் அல்லது சூடான வேகவைத்த சாதத்துடன் கூட நன்றாகப் போகும் அற்புதமான சைவக் குழம்பு !

Ingredients:

  • 15 பலாக்கொட்டை
  • 1 தேங்காய்
  • 10 பச்சை மிளகாய்
  • 2 பெரிய
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் நெய்
  • 3 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • கல்பாசி
  • 3 கிராம்பு
  • 1 அண்ணாச்சி பூ
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • தண்ணீர்
  • 1 பிரியாணி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • குக்கர்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் தேங்காயை துருவி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு வெங்காயம் நறுக்கியது சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு தேங்காய் துருவலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து பச்சை மிளகாய், கசகசாவை போட்டு வாசம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
  4. வதங்கிய பொருட்களை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
  5. பலாக்கொட்டையை வெறும் வாணலியில் லேசாக வாடினால் மேலே உள்ள தோல் உரித்து வரும் மேலே உள்ள வெள்ளை தோலை உரித்து எடுத்து குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
  6. விசில் அடங்கியதும் வேக வைத்த பலாக் கொட்டைகள் எடுத்து மேலே உள்ள சிகப்பு தோலை உரித்து எடுக்கவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு, கருவேப்பிலை தாளித்து ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
  9. அவை வதங்கியதும் அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றவும்.
  10. தேவையான உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தோல் உரித்த பலாக்கொட்டையினை சேர்த்து கொதிக்கவிடவும்.
  11. கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். பலாகொட்டை சொதி குழம்பு ரெடி.