வட இந்திய ஸ்டைல் ருசியான பட்டாணி கிரேவி இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Summary: சுட சுட சாதம், மற்றும் சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான வட இந்திய ஸ்டைலில் இது போன்று பட்டாணி கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.இந்த பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 1 கப் காய்ந்த பட்டாணி
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • 4 பல் பூண்டு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • ½ டீஸ்பூன் சீரகப்பொடி
  • உப்பு
  • ½ டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் காய்ந்த பட்டாணியை இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும்.
  2. பின் ஊறவைத்த பட்டாணியை குக்கரில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு 4 விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
  3. பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை சேர்த்து தாளிக்கவும், பிறகு அதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சீரக தூள்,சேர்த்து கிளறி வேக வைத்துள்ள பட்டாணியை சேர்க்கவேண்டும்.
  5. பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு கொதிக்கவிடவேண்டும்.
  6. கொதித்ததும் இறக்கி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து அத்துடன் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.