ருசியான வெஜிடபிள் பாசிப்பயிறு இட்லி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: எப்பொழுது காலை உணவாக இட்லி, தோசை என்று செய்து கொடுப்பீர்கள். ஆனால் இனி இது போன்று காய்கறிகள் நிறைந்து உள்ள சத்தான வெஜிடபிள் உடலி செய்து கொழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் முளைகட்டிய பாசிப்பயிறு
  • 2 கப் புழுங்கல் அரிசி
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • ½ கப் காய்கறிகள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 இஞ்சி
  • 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
  • உப்பு

Equipemnts:

  • இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் அரிசி, பயிறு இரண்டையும் 2 மணிநேரம் ஊறவிடவும்.
  2. ஊறியதும் அதனை மிக்சியில் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு அதனை ஒரு பௌலில் கொட்டி அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகள். மற்றும் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. அடுத்து இட்லி தட்டில் அதன் குழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும், இட்லி தட்டை வைத்து வேக விட்டு பரிமாறவும்.