அபாரமான ருசியில் சிக்கன் சிந்தாமணி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் இதன் ருசியே தனி தான்!

Summary: சிந்தாமணி சிக்கன் என்றாலே கோயம்பத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக்கொள்வது ஊறுகாய், உருளைக்கிழங்கு பொரியல், அதிகமாக சிப்ஸ், ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணி செய்வார்களாம். அந்த அளவிற்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லாவகையான உணவிற்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 300 கிராம் போன்லெஸ் சிக்கன்
  • ¼ கிலோ சின்ன வெங்காயம்
  • 6 மிளகாய் வற்றல்
  • ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கருவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் சிக்கனை சுத்தம் செய்து துடுகளாக்கி தண்ணீரில் அலசி வடிகட்டிக்கொள்ளவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிள்ளிய மிளகாய் வற்றல், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  3. அத்துடன் பிரட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து தண்ணீர் தேவையென்றால் சிறிது தெளித்து மூடி போட்டு நன்கு வேகவிடவும்.
  4. நன்றாக சிக்கன் சுண்டி வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.