மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான பானி பூரி இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

Summary: பானி பூரி என்றால் யாருக்கு தான் பிடிக்காது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்னாக்ஸ் என்றால் அது வடநாட்டு ஸ்டைலில் செய்யப்படும் இந்த பானி பூரி தான். ஆனால் அதை சாப்பிட கடைகளுக்கு தான் அடிக்கடி போகவேண்டும். இனி அந்த கவலை வேண்டாம் வீட்டிலேயே வடநாட்டு ஸ்டைலில் எப்படி பானி பூரி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ரெடிமேட் மினி பூரி
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 5 மிளகு
  • 1 பல் பூண்டு
  • 2 உருளைக்கிழங்கு
  • கொண்டைக்கடலை
  • 1 வெங்காயம்
  • ¼ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • உப்பு

Equipemnts:

  • மிக்ஸி

Steps:

  1. முதலில் புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்
  2. பிறகு அரைத்த விழுதுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்வும்.
  3. இந்த தண்ணீர் நீர்க்க இருக்க வேண்டும்.
  4. அடுத்து உருளைக்கிழங்கு, மற்றும் கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  5. அடுத்து வேகவைத்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒன்றாக சேர்த்து நன்கு பிசையவும்.
  6. விரும்பினால் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.
  7. பிறகு அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
  8. அடுத்து பொறித்த மினி பூரி ஒன்று எடுத்து அதன் மேல் பகுதில் சிறிதளவு ஓட்டை போட்டு அத்துடன் சிறிதளவு கலந்துவைத்துள்ள உருளைக்கிழங்கு மசால் கொஞ்சம் வைக்கவும்.
  9. இது போன்று தேவையான பூரிகளில் அனைத்திலும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து கொள்ளவும்.
  10. பிறகு சாப்பிடும் நேரத்தில் அந்த பூரிகளை ஒவொன்றாக எடுத்து புதினா கரைசலை ஊற்றி சாப்பிடவும்.