மதியம சுட சுட சோறுடன் சாப்பிட பாகற்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே ருசி!

Summary: சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட பாகற்காய் தொக்கு இனி இது போன்று ஒரு முறை செய்து வீட்டில் யூலைவர்களுக்கு கொடுத்து பாருங்க பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.அதுமட்டும் அல்லாமல் இதனை செய்து ஒரு கண்ணாடி பாட்டிலோ அல்லது பீங்கான் பாட்டிலிலோ போட்டு ப்ரிட்ஜில் சேமித்து வைத்து கொண்டால் தேவைப்படும் பொழுதெல்லாம் எடுத்து சாப்பிடலாம்.இந்த பாகற்காய் தொக்கு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 பாகற்காய்
  • 10 பல் பூண்டு
  • புளி
  • 2 டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • கடுகு, சீரகம், தனியா, வெந்தயம்,
  • நல்லெண்ணெய்
  • பெருங்காயம்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் பாகர்காவை விதைகளை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். பூண்டுகளை தோல் நீக்கி வைக்கவும்.
  2. அடுத்து புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.
  3. அடுத்து ஒரு வாணலில் கடுகு, சீரகம், தனியா, வெந்தயம், சேர்த்து நன்கு சிவக்க வறுத்து ஆறவைத்து மிக்சியில் சேர்த்து பொடியாகவும்.
  4. பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்து பூண்டை சேர்க்கவும்.
  5. பிறகு நறுக்கிய பாகற்காய் சேர்த்து வேகும் அளவிற்கு வதக்கவும்.
  6. பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூ, புளிக்கரைசல் ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம்.
  7. குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் மேலே வரும் பொழுது பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து அத்துடன் பெருங்காயப்பொடியையும் தூவி சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறவும். பிறகு பரிமாறவும்.