தித்திக்கும் சுவையில் பால் சர்க்கரை பொங்கல் இப்படி செய்து பாருங்க!

Summary: சர்க்கரை பொங்கல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு பட்டியலில் இந்த சர்க்கரை பெண்களும் ஒன்று. அந்தவகையில் இனி இது போன்று பால், சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் பச்சரிசி
  • ¼ கப் பாசிப்பருப்பு
  • 1 கப் பால்
  • 50 கிராம் நெய்
  • 15 முந்திரி பருப்பு
  • வெல்லம்
  • 5 ஏலக்காய்

Equipemnts:

  • 1 பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  3. அடுத்து முந்திரி பருப்பை நெய் விட்டு வறுத்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
  4. பிறகு தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை போடவும். அரிசி நன்றாக வெந்தவுடன் அத்துனுடன் தூளாக்கிய வெல்லத்தை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  5. அடிபிடிக்காமல் இருக்க சிறிதளவு நெய் அல்லது டால்டா சேர்த்து கலக்கவும். பிறகு அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  6. நன்றாக குலைந்தவுடன் நெய் சேர்த்து இறக்கவும்.