ருசியான சுட்ட கத்தரிக்காய் தந்தூரி மசியல் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட சூப்பரா இருக்கும்!

Summary: கத்தரிக்காய் குழம்பில் சுட சுட சாதம் பிசைந்து சாப்பிடுவதே தனி சுவைதான். அந்த வகையில் கத்தரிக்காயை சுட்டு குழம்பு வைத்து அதை சாப்பிடுவதில் இருக்கும் சுவை வேறெதிலும் இருக்க முடியாது. அந்தவகையில் கிராமத்து ஸ்டைல் சுட்ட கத்தரிக்காய் தந்தூரி மசியல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். கத்திரிக்காய் மசியல் என்பது கத்தரி மற்றும் பச்சை மிளகாயுடன் செய்யப்படும் புளி சார்ந்த குழம்பு ஆகும்.

Ingredients:

  • 4 கத்தரிக்காய்
  • 1/4 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 2 சிட்டிகை பெருங்காயம்
  • உப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
  • 2 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. கத்தரிக்காய் மேல் நெய் தடவி அடுப்பில் நன்கு சுட்டு எடுக்கவும்.
  2. அதன் தோலை சுத்தமாக எடுத்து கட் செய்து வைக்கவும்.
  3. மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. பின்னர் கட் செய்து வைத்த கத்திரிக்காயை போட்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அதில் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடம் கிளறி விடவும்.
  6. பின்னர் நன்கு கடைந்து இறக்கவும். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அல்லது சைட் டிஷ்ஷாக பயன்படுத்திக் கொள்ளலாம்.