காலை உணலுக்கு ருசியான சேலம் அலா புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: வழுவழுப்பான தோற்றத்துடன் குறைந்த விலையில் பலரது பசியாற்றும் ஆரோக்கியத் தின்பண்டம்தான் அல்வா புட்டு! சேலத்தில் இருக்கும் எந்தப் பலகாரக் கடைக்குச் சென்றாலும், அல்வா புட்டைத் தரிசிக்கலாம். குறிப்பாக வீட்டிலேயே செய்யப்படும் பலகாரங்களில் அல்வா புட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. பண்டிகைக் காலச் சிற்றுண்டிகளில் அல்வா புட்டு தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது.

Ingredients:

  • 1 டம்ளர் பச்சரிசி
  • 150 கிராம் வெல்லம்
  • 2 ஏலக்காய்
  • நறுக்கிய தேங்காய்

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பவுள்

Steps:

  1. அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து. பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. வெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் சிறிது நேரம் வெல்லம் கரையும் வரை வைத்து வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. அடி கனமான பாத்திரத்தில் வடித்து வைத்துள்ள வெல்லப்பாகு உடன் கரைத்து வைத்துள்ள அரிசி மாவையும் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறவும். ஏலக்காய்த்தூள் தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் சிறிது சிறிதாக இறுகி இட்லி மாவு பதம் வரும் வரை கிளறவும். விருப்பமெனில் 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
  6. பின்பு அதனை ஒரு தட்டிலோ அல்லது வெள்ளை ஈரத்துணியில் ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊற்றி ஆற விடவும். சேலம் அலா புட்டு ரெடி.