காரசாரமான உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு இப்படி செய்து பாருங்க! வாசனையும், சுவையும் அசத்தலாக இருக்கும் !

Summary: ஒரு சிலர் சமைக்கும் உணவு மிகவும் சுவையுள்ளதாகவும், ஒருசிலர் கைப்பக்குவத்தில் அவர்கள் சமைப்பது சுவை சற்று குறைவாகவும் இருக்கும். உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு இங்கு கொடுத்துள்ள பதிவில் உள்ளது போல் செய்து பாருங்கள் , ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் அடிக்கடி இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள். வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/2 கிலோ மட்டன்
  • 1 வெங்காயம்
  • 2 உருளைக்கிழங்கு
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 டீஸ்பூன் மல்லித் தூள்
  • உப்பு
  • 1 கப் தயிர்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
  3. பின்புஅதில் மட்ட போட்டு 2 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
  4. பிறகுஅதில் தயிர் ஊற்றி கிளறி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  5. பின்விசிலானது போனதும், குக்கரை திறந்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து, மீண்டும் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனப் பின் குக்கரை திறந்து கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு ரெடி!!!