ருசியான நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: கோயம்புத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கன் சிந்தாமணியும் ஒன்று. நம்மில் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக் கொள்வது ஊறுக்காய், உருளைக்கிழங்கு வறுவல் அதிகபட்சமாக சிப்ஸ். ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணியை செய்வார்களாம். அந்த அளவுக்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லா வகையான உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.

Ingredients:

  • 1 கிலோ நாட்டுக்கோழிகறி
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 10 சின்ன
  • 15 வர மிளகாய்
  • 2 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • மஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டி கடலை எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் சின்ன வெங்காயத்துடன் 5 வரமிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பத்து வரமிளகாயை விதை நீக்கிவிட்டு சேர்க்கவும்.
  3. மிளகாய் சிவந்தவுடன் கருவேப்பிலையை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு அரைத்து வைத்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
  5. பின் நாட்டுக்கோழி சேர்த்து மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  6. அதன் பின் கொத்தமல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்பு சிக்கன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  7. சிக்கன் வெந்து தண்ணீர் நன்றாக சுண்டி வரவேண்டும். உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை கூட்டிக் கொள்ளலாம். நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல் ரெடி.