மணமும் சுவையும் நிறைந்த கல்யாண ரசம் வைப்பது எப்படி ?

Summary: கல்யாண வீட்டில் ரசம் மணமாகவும், ரூசியாகவும் இருப்பதற்கு ஒரு சில பொருட்கள் சேர்த்து ஒரு முறையில் ரசம் வைப்பார்கள். இன்று அந்த முறையை நான் சொல்லித் தருகிறேன். ஆம், இன்றைய பதிவில் கல்யாண ரசம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதுபோல் ஒரு முறை ரசம் வைத்து பாருங்கள் இனிமேல் உங்க வீட்டில் உள்ளவர்கள் உங்களுடைய ரசத்திற்கு மட்டுமே அடிமை.

Ingredients:

  • 2 tbsp தனியா
  • 1 tbsp துவரம் பருப்பு
  • 2 tbsp சீரகம்
  • 5 வர மிளகாய்
  • 1 tbsp பெருங்காயத்தூள்
  • 4 தக்காளி
  • 20 கிராம் புளி
  • 1 சிறிய கட்டி வெல்லம்
  • 2 பச்சை மிளகாய்
  • ½ லிட்டர் தண்ணீர்
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 கைபிடி கொத்த மல்லி
  • 1 tbsp நெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp சீரகம்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 2 பவுள்4

Steps:

  1. முதலில் 100 கிராம் துவரம் பருப்பை எடுத்து குக்கரில் போட்டு அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து. பின் தண்ணீரை வடிகட்டி விட்டு பருப்பை மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு நாம் வைத்துள்ள தக்காளியை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அரைத்த தக்காளி பேஸ்ட்டை கடாயில் சேர்த்து கொள்ளவும்.
  3. அதன் பின் நாம் எடுத்து வைத்திருக்கும் புளியை 50 கிராம் தண்ணீருடன் கரைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும். இந்த புளி கரைசலையும் கடாயில் சேர்த்துக் கொள்ளவும்.
  4. பின் ஒரு சிறுகட்டி வெல்லம் மற்றும் கீரிய பச்சை மிளகாய், அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதிக்க வையுங்கள்.
  5. அதன் பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தனியா, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து எண்ணெய் இல்லாமல் அனைத்து பொருட்களும் நன்றாக வறுத்து எடுக்கவும்.
  6. கடைசியில் கடாயில் பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள் பின்பு நமது ரசம் கொதித்து முடித்ததும் அதில் நாம் மசித்து வைத்துள்ள துவரம்பருப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. அதன் பின் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது ஊற்றி நன்றாக கலந்து விடவும். பின்பு ரசம் கொதித்து வரும் நிலையில். நம் தயார் செய்து வைத்திருக்கும் ரசப்பொடியை தூவி சிறிது மஞ்சள் பொடியும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  8. பின் மிதமான தீயில் ரசத்தை வைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய கொத்தமல்லியை தூவி விடவும் பின் மற்றொரு கடையில் நெய் ஊற்றி கொள்ளவும். நெய் நன்றாக உருகி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், சிறிது கருவேப்பிலை போட்டு நன்கு தாளித்துக் கொள்ளவும்.
  9. இந்த தாளிப்பை ரசத்தில் ஊற்றி. ரசத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து ரசத்தை மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு இறக்கி விடவும் அவ்வளவுதான் மிகவும் ருசியான கல்யாண வீட்டு ரசம் தயாராகிவிட்டது.