ருசியான கிராமத்து கீரை தயிர் கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!

Summary: கோடை காலத்திற்கு ஏற்ற உணவாக கிராமத்து மக்கள் தினமும் தங்கள் உணவில் கீரையையும், தயிரையும் சேர்த்து கொள்வது வழக்கம். அந்த வகையில் கீரை தயிர் கறி செய்வது எப்படி என்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 கப் கீரை
  • 1 கப் தயிர்
  • 3 கிராம்பு
  • 3 பல் பூண்டு
  • 3 வர மிளகாய்
  • கருவேப்பிலை
  • வெந்தயம்
  • 2 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • இஞ்சி
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் கடுகு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஏதேனும் ஒரு வகை கீரையை தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அத்துடன் பூண்டு, வர மிளகாய், வெந்தயம், கருவேப்பிலை, சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
  3. பிறகு அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிவக்க வதக்கவும்.
  4. பிறகு அதில் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
  5. அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வதங்கியதும், கீரையை சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.
  6. பிறகு அத்துடன் தயிர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.