பஞ்சு போன்ற மென்மையான கடலை மாவு இட்லி இப்படி செய்து பாருங்க ? இதன் ருசியே தனி தான்!

Summary: அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று கடலை மாவு இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை நேரங்களில் திடீரென்று இட்லி செய்ய வேண்டும் என்றால் மாவுல்லாமல் தவிக்காதீர்கள் உடனடியாக இந்த கடலை மாவு இட்லியை செய்து அசத்துங்கள் . மேலும் சுவையான கடலை மாவு இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 கப் கடலை மாவு
  • 2 tbsp ரவா
  • 1 pinch பெருங்காயத்தூள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 ½ tbsp உப்பு
  • 1 tbsp எண்ணெய்
  • ½  tbsp சோடா உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய தட்டு

Steps:

  1. முதலில் தேவையான அளவு கடலை மாவு எடுத்துக் கொள்ளுங்கள் கடலை மாவை சலித்து பயன்படுத்தினால் இட்லி மிருதுவாக வரும். அதனால் ஒரு பெரிய பவுளில் அரிப்பை வைத்து கடலை மாவை முதலில் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு சலித்து எடுத்த கடலை மாவுடன் ரவா மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு இடித்து கொண்டு மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
  3. அதன் பின் மஞ்சள் தூள் மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
  4. இட்லி மாவு அதிக கெட்டியாகவும் இருக்கக் கூடாது, தண்ணீர் பதமாகவும் இருக்கக் கூடாது எப்போதும் இட்லி மாவு ஊற்றும் பதத்திற்கு மாவை தயார் செய்து கொள்ளுங்கள். பின்பு இதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  5. எண்ணெய் ஊற்றிய பின் நன்கு கலந்து கொண்டு இதனுடன் சிறிது சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் இட்லி மென்மையாக வரும் இப்போ இப்பொழுது மாவை நன்றாக ஒரு நிமிடம் அடித்துக் கொண்டே இருங்கள்.
  6. பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சூடேறியதும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லியை ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பின் இட்லி பாத்திரத்தில் ஆவி வந்ததும் இட்லியை எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் ருசியான கடலை மாவு இட்லி தயார்கிவிட்டது.