கோடை வெயிலக்கு இதமாக வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!

Summary: கோடை ஆரம்பிச்சாச்சு… இனி என்ன வீட்டிலேயே குளு குளு ஐஸ்கிரீம் செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே….. வாழைப்பழமும் முந்திரி சேர்த்து உண்டால் மிகவும் ருசியாக இருக்கும். அதுவே ஐஸ்கிரீமில் சேர்த்து செய்தால்  சுவை அலாதியாக இருக்கும். குழந்தைகள் எப்போதும் அதிகமாக விரும்புவது ஐஸ்கிரீம் வகைகளைத்தான். நாவிற்கு குளிர்ச்சி தரும் வகையில் வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/4 கிலோ முந்திரிப் பருப்புகள்
  • 1 கப் ஆப்பிள் சாறு
  • 3 பழுத்த வாழைப்பழங்கள்
  • 1 கப் பால்
  • 3 டேபிள் ஸ்பூன் தேன்
  • 1 டீ ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 ஐஸ்கிரீம் கோப்பை

Steps:

  1. முந்திரிகளைமிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.
  2. இத்துடன்வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.
  3. இதனைஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.  இரவுமுழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்குசாப்பிட இனிது.