காரசாரமான ருசியில் குண்டூர் சில்லி சிக்கன் இப்படி செய்து பாருங்கள்! ஆஹா இதன் ருசியே தனி தான்!

Summary: சில்லி சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சைனீஸ் உணவு வகை. இன்னும் சொல்லப்போனால் பல துரித உணவகங்களில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு உணவு என்றால் அது சில்லி சிக்கன் தான் என்று சொன்னால் அது மிகை அல்ல. சில்லி சிக்கனை விரும்பி உண்பவர்கள் இதை பெரும்பாலும் துரித உணவகங்களில் ஆர்டர் செய்து தான் உண்கிறார்கள். ஆனால் இதை நாம் வெகு எளிதாக வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்து விடலாம். பெரும்பாலான குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும்.

Ingredients:

  • 1/2 கிலோ போன்லெஸ் சிக்கன்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சோயா ஜாஸ்
  • 1 முட்டை
  • உப்பு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 3 டேபிள் ஸ்பூன் மைதா
  • 2 டேபிள் ஸ்பூன் சோள
  • 1 நறுக்கிய
  • 10 நறுக்கிய பூண்டு
  • 1 குடைமிளகாய்
  • 2 டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
  • 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1/2 டீஸ்பூன் சோயா
  • 1/2 டீஸ்பூன் வினிகர்
  • 1 டேபிள் ஸ்பூன் சோள
  • உப்பு
  • சர்க்கரை
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. 30 நிமிடம் கழித்து மைதா மாவு, சோளமாவு சேர்த்து நன்றாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிக்கனை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இதேபோல் அனைத்தையும் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
  5. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு அதனுடன் குடை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  6. பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், வினிகர் சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும். இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  7. சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
  8. பிறகு இந்தக் கலவையில் சோள மாவு கரைசலை ஊற்றி குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும்.
  9. பிறகு பொரித்த சிக்கனை இதனுடன் சேர்த்து அனைத்தையும் நன்றாக சேரும் வரை கலக்கவும்.
  10. சுவையான காரசாரமான சில்லி சிக்கன் தயார். வெங்காயத்தாள் அல்லது நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.