வீடே மணமணக்கும் ருசியான கோழிக்கறி ரசம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: இன்று நாம் கோழிக்கறியை வைத்து அட்டகாசமான சுவையில் ரசம் வைப்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பலருக்கும் சோறுடன் சிக்கன் குழம்பு ஊற்றி அதனுடன் சிறிது ரசம் போட்டு சாப்பிடுவது பிடிக்கும். அதன் சுவையும் அலாதியாக இருக்கும். ஆனால் இன்று நாம் கோழிக்கறியை ரசம் போல் வைக்க போகிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் அடுத்த முறையில் உங்களை இன்று போல் ரசம் வைக்க சொல்லி வற்புறுத்தி எடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இந்த கோழிக்கறி ரசம் இருக்கும்.

Ingredients:

  • கோழி கறி, குழம்பில் உள்ள ஈரல்
  • புளி
  • கொத்தமல்லி
  • கருவேப்பிலை
  • கடுகு, வெந்தயம்
  • 1 ஸ்பூன் வற்றல்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ½ லிட்டர் தண்ணீரில் புளியை நன்கு கரைத்து வடிகட்டவும்.
  2. பிறகு வற்றல், சீரகம், இரண்டையும் மிக்சில் அரைத்து புளிக் கரைசலில் சேர்த்து கரைத்து அதில் கொத்தமல்லி தூவி விடவும்.
  3. அடுத்து கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கரைத்து வைத்த ரசத்தை ஊற்றி கொதிக்க விடவும்.
  4. கடைசியாக நாம் ஏற்கனவே செய்த கறி குழம்பில் சிறிதளவு குழம்பும், ஈரல்கள், எடுத்து ரசத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.