மதிய உணவுக்கு ருசியான மாங்காய் வற்றல் குழம்பு இப்படி செய்து பாருங்க!

Summary: தினமும் சாம்பார் இல்லையென்றால் புளிக்குழம்பு சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த மாங்காய் வற்றல் குழம்பு.இந்த குழம்பை சுலபமாகவும், குறைந்த நேரத்திலே சுவையாகவும் செய்து விடலாம். சுட சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் வீட்டில் உள்ள எல்லோரும் மீண்டும் எப்போ இந்த குழம்பு செய்விங்க என்று கேட்பார்கள்.இந்த குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

Ingredients:

  • பெருங்காயம்
  • கறிவேப்பிலை
  • 6 மாங்காய் வற்றல்
  • 1 ஸ்பூன் மிளகு
  • காய்ந்த மிளகாய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • புளி
  • மஞ்சள் தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. (முதலில் 3 மாங்காய் நறுக்கி உப்பு போட்டு 3 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும்)
  2. முதலில் ஒரு பாத்திரத்தில் மாங்காய் வற்றலை வெந்நீரில் ஊறவைக்கவும்.
  3. பின் வாணலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக்கொள்ளவும்.
  4. பிறகு சிறிது எண்ணைய் வாணலில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, அரைத்த விழுது, ஊறவைத்த மாங்காய் வற்றல், சேர்த்து அத்துடன் புளிக்கரைசலை சேர்த்து, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  5. கொதித்தபின் இறக்கவும் இப்பொழுது சுவையான மாங்காய் வற்றல் குழம்பு தயார்.