வீடே மணக்கும் பாசிபயறு சாதம் செய்வது எப்படி ?

Summary: ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு உங்களுக்கும் சலித்து போய் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு சலித்து போய் இருக்கும். ஒரு மாறுதலாக சில சாதங்களை தயார் செய்து அனுப்பலாம். ஆம் உதாரணமாக நீங்கள் சாம்பார் சாதம் அடிக்கடி செய்திருப்பீர்கள் அதை தவிர இன்னும் சில சாதங்கள் செய்து கொடுத்து அனுப்பலாம். இன்று பாசி பயறு சாதம் செய்து பற்றி பார்க்கலாம். இந்த சாதத்தில் அதிகமான காய்கறியும் சேர்த்து சமைப்பதினால் உங்கள் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமும் மேம்படும். இன்று இந்த பாசிப்பயறு சாதத்தை எப்படி சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 துண்டு இஞ்சி
  • 6 பச்சை மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • 1 tbsp சோம்பு
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp நெய்
  • 2 துண்டு பட்டை
  • 1 பிரியாணி இலை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 tbsp சீரகம்
  • 2 முந்திரி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 உருளை கிழங்கு
  • 1 கேரட்
  • 1 குடை மிளகாய்
  • 2 பீன்ஸ்
  • 1 கப் அரிசி
  • ½ கப் பாசிப்பயறு
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பாசிப்பயறு சாதம் சமைப்பதற்கு தேவையான அளவு பயறு எடுத்து சமைப்பதற்கு முதல்நாள் இரவிலே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் மளிகை கடைகளில் இருக்கும் ஊற வைத்த பாசிப்பயிரை வாங்கிக் கொள்ளுங்கள்.
  2. முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியதும் பின்பு இதனுடன் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், முந்திரி போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.
  3. பின்பு நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் இதனுடன் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  4. தக்காளி நன்றாக வெந்து மசிந்தவுடன் நம் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், குடைமிளகாய், பீன்ஸ் போன்ற காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும்.
  5. பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு, துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போன்ற பொருட்களை சேர்த்து சிறிது அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.
  6. அதன் பின் குக்கரில் நம் போட்ட காய்கறிகள் நன்றாக வதங்கிய பின் அதனுடன் நாம் அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொள்ளவும். நன்றாக கிளரி விட்டதும் எடுத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பாசிப்பயறு இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  7. அதன் பின் வழக்கம் போல் நீங்கள் போட்டிருக்கும் அரசியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து. தேவையான அளவு உப்பும் சேர்த்து கொள்ளுங்கள். பின்பு குக்கரை மூடி விடுங்கள் குக்கரில் நான்கு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து.
  8. பின் நான்கு விசில் வந்ததும் குக்கரை இறக்கி பிரஷர் ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் இப்பொழுது சுவையான பாசிப்பயறு சாதம் இனிதே தயாராகி விட்டது.