டீக்கடை இனிப்பு போன்டா இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான்!

Summary: இன்று நாம் டீக்கடை இனிப்பு போண்டா பற்றி தான் பார்க்க போகிறோம் டீக்கடைகளில் செய்யப்படும் இனிப்பு போண்டாவை சாப்பிட்டு பார்த்தவர்களுக்கு அதன் சுவை பற்றி நன்கு தெரிந்திருக்கும் அற்புதமான சுவையில் இருக்கும். இன்று நாமும் அதே சுவையில் டீக்கடை இனிப்பு போண்டா செய்யப் போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • ½ கப் சர்க்கரை
  • 2 ஏலக்காய்
  • 1 கப் மைதா
  • 2 tbsp ரவா
  • 2 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை ஆப்ப சோடா
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் அளவிற்கு சர்க்கரை மற்றும் இரண்டு ஏலக்காய்களை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு பெரிய பவுளில் நாம் அரைத்த சர்க்கரை மற்றும் ஒரு கப் மைதா மாவு, இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை ஆப்ப சோடா மற்றும் இரண்டு டீஸ்பூன் ரவா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கரைத்துக் கொள்ளுங்கள் பின்பு நாம் கரைத்த மாவை ஒரு 20 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் 20 நிமிடம் கழித்து கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் போண்டா மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.
  4. பின் தீயை மிதமாக ஏரிய விடுங்கள் பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும், கைகளில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு நாம் சேர்ந்த மாவை சிறுசிறு உருண்டையாக எடுத்து கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  5. பின் எண்ணெயில் சேர்த்த இனிப்பு போண்டா முழுவதும் பொன்னிறமாக வந்தவுடன் வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான டீக்கடை இனிப்பு போண்டா இனிதே தயாராகி விட்டது.