மதிய உணவுக்கு ஏற்று ருசியான கேரட் உசிலி கூட்டு இப்படி செய்து பாருங்க! அசத்தலாக இருக்கும்!

Summary: கேரட் மற்றும் பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான தென்னிந்திய பாணி உணவு, கேரட் பருப்பு உசிலி தமிழர்களின் வீடுகளில் ஒரு சுவையான உணவாகும். ஒரு எளிய வார நாள் மதிய உணவிற்கு வேகவைத்த சாதம் மற்றும் ரசம் சேர்த்து பரிமாறவும். மிகவும் ஆரோக்கியமான உணவு, பருப்பு உசிலி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய உணவாகும், இது நொறுக்கப்பட்ட பருப்பு மற்றும் நறுக்கப்பட்ட காய்கறிகளின் கலவையுடன் தயாரிக்கப்படுகிறது

Ingredients:

  • 100 கிராம் நறுக்கிய கேரட்
  • 50 கிராம் கடலைப்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 2 வரமிளகாய்
  • 2 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 சிட்டிகை உப்பு
  • 1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்த பருப்பு
  • 1/2 கப் நறுக்கிய சின்ன
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. கடலைப்பருப்பை 1மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. பின் வடிகட்டி அதனுடன் சீரகம், சோம்பு, வரமிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. கேரட்டை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
  5. பின்பு வெங்காயம் சேர்த்து, உப்பு சிறிது சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. இதில் சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பின்னர் கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. நன்கு வதங்கியதும், ஆவியில் வேக வைத்த கடலைப்பருப்புக் கலவையை கேரட்டில் உதிர்த்து கிளறவும்.
  8. நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  9. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.