சுவையான வாழைப்பழ மால்புவா இப்படி ஒரு முறை செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Summary: மால்புவா பொதுவாக கோதுமை மாவு மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் பாரம்பரிய இந்திய இனிப்பு செய்முறை. மால்புவா எனும் சுவையான இனிப்பு பண்டம் ராஜஸ்தான் மற்றும் ஒடிஷாவில் மிகவும் பிரபலமானது. மாவையும் , சர்க்கரை பாகுவையும் சேர்த்து, சுவையான மால்புவாவை தயாரிக்கிறார்கள். பொதுவாக தீபாவளி அல்லது நவராத்திரி பண்டிகை காலங்களில் தயாரிக்கப்படுகிறது.

Ingredients:

  • 1 கப் மைதா
  • 1 வாழைப்பழம்
  • 1 கப் சர்க்கரை
  • 1 கப் பால்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • ரெட் கலர் ஜெல்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வாழைப்பழத்துடன் சோம்பு, ஏலக்காய், பால் சிறிதளவு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  2. அதை பவுலில் மாற்றி அதனுடன் மைதா மாவு சேர்த்து பால் சேர்த்து கிளறவும்.
  3. பின்பு தேவை எனில் சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. 20 நிமிடம் அதை மூடி வைத்து விடவும். அந்த நேரத்தில் ஒரு கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு வைத்துக் கொள்ளவும்.
  5. அதில் சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துக் கொள்ளவும். தேவையெனில் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒவ்வொரு கரண்டியாக மாவு கலவையை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
  7. பின்பு அதை சர்க்கரைப் பாகில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  8. அதன் மேலே முந்திரி, பிஸ்தா தூவி பரிமாறவும். வாழைப்பழ மால்புவா ரெடி.