அடிக்கிற வெயிலுக்கு குளு குளுனு ஷார்ஜா ஜூஸ் இப்படி செய்து பாருங்க!

Summary: அடிக்குற வெயிலுக்கு ஏதாவதும் குளுகுளுனு குடிக்கணும் என்று தோணுதா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொளுத்துற வெயிலுக்கு இது போன்று ஷார்ஜா ஜுஸ் வீட்டிலேயே செய்து குடித்து பாருங்க. அதன் ருசியே தனிதான்.இதை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஜுஸ் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ½ லிட்டர் பால்
  • 150 கிராம் சர்க்கரை
  • 1 வாழைப்பழம்
  • 1 மாதுளை பழம்
  • ¼ கப் வறுத்த வேர்க்கடலை
  • ½ கப் ஐஸ் கட்டிகள்

Equipemnts:

  • மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை காய்த்து நன்கு ஆறவிடவும்.
  2. அடுத்து வேர்க்கடலையை தோல் நீக்கி மிக்சில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. வாழைப்பழம், மற்றும் மாதுளை பழம் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பழங்கள் அறைந்ததும், அதில் சர்க்கரை மற்றும் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து அதில் அரைத்துவைத்துள்ள வேர்க்கடலை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நொரை பொங்க நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு நீளமான டம்பளரில் ஊற்றி அருந்தவும்.