ருசியான திராட்சை ஜூஸ் வெறும் 2 நிமிடத்தில் செய்து பாருங்க! குடிப்பதற்கு அசத்தலாக இருக்கும்!

Summary: கோடையில் அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, ஜூஸ் குடிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய ஜூஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், எளிமையாக செய்யும் வகையிலும், திராட்சை ஜூஸ் ஏற்றதாக இருக்கும். பழங்களில் நிறையப் பேர் விரும்பிச் சாப்பிடும் ஓர் பழம்தான் திராட்சை, இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும் இப்பழத்தை சாறு எடுத்து குடித்தால் இப்பழத்தின் முழுச் சத்துக்களையும் பெறலாம்.

Ingredients:

  • 1 கிலோ கறப்பு திராட்சை
  • 2 கப் சர்க்கரை
  • 6 ஐஸ் க்யூப்
  • 1 எலுமிச்சை
  • 1 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு சேர்த்து திராட்சையை சுமார் 20 நிமிடங்கள் உற வைக்கவும். பின்னர் வேறு தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும்.
  2. பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கழுவிய திராட்சையை சேர்க்கவும். அதில் திராட்சை‌ மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 15-20 நிமிடங்கள் வேக விடவும்.
  3. திராட்சை நன்கு கொதித்ததும் அதனை நன்கு மசித்து விடவும்.
  4. பின்னர் அதனை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க விடவும்.
  5. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு திராட்சைக் கலவையை நன்கு வடி கட்டவும். அதன் சாறு தனித்து வந்து விடும்.
  6. பின் அதே பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் திராட்சை சாற்றினை சேர்க்கவும் அது சிறிது நேரம் கொதிக்கவும் அடுப்பை அணைத்து விடவும்.
  7. ஒரு டம்ளரில் ஜஸ் க்யூப் மற்றும் நாம் தயாராக வைத்துள்ள திராட்சை ஜூஸ் 4 தேக்கரண்டி ஊற்றவும், அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  8. சுவையான திராட்சை ஜூஸ் ரெடி. அதன் மீது 2 புதினா இலை சேர்த்து அலங்கரிக்கவும்.