ருசியான மலாய் முட்டை கறி இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Summary: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, புல்கா, நாண் என்று எதையாவது செய்து சாப்பிடலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான மசாலா செய்யுங்கள். அதுவும் வித்தியாசமான முட்டை மசாலா செய்ய நினைத்தால், முட்டை மலாய் மசாலா செய்யுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும். முட்டை மிகவும் விரும்பப்படும் புரதம் நிறைந்த உணவுகளில் ஒன்றாகும்.

Ingredients:

  • 6 முட்டை
  • 2 பெரிய
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 2 கப் தேங்காய் பால்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • கருவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முட்டையை வேக வைத்து ஓடெடுத்து பாதியாக நறுக்கி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, எல்லாம் சேர்த்து நன்கு பிரட்டவும்.
  5. பின்னர் பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
  6. மசாலா நன்கு வதங்கிய பின் சிறிது தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
  7. கடைசியாக மீதமுள்ள தேங்காய பால் சேர்த்து கொதி வர துவங்கியதும் எடுக்கவும்.