ருசியான கற்பூரவல்லி இலை பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இந்த பஜ்ஜியின் சுவையே தனி தான்!

Summary: நாம் தமிழில் அழைக்கும் கற்பூரவல்லி நம் இடத்தில் ஓமவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. மாலையில் டீ, காபி குடிக்கும் போது, அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலான பஜ்ஜி செய்து சாப்பிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். சளி இருமல் இருந்தால் கற்பூரவள்ளி இலை‌ சாப்பிட்டால் சரியாகிவிடும். கற்பூரவள்ளி டீ, கற்பூரவள்ளி கசாயம் என குடித்திருப்பீர்கள். ஆனால் இன்று வித்தியாசமான சத்தான சுவையில் கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் கடலை மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் ஓமம்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 சிட்டிகை சமையல் சோடா
  • 20 கற்பூரவள்ளி
  • 1/2 சிட்டிகை பெருங்காயம்
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. கற்பூரவல்லி இலைகளைக் கழுவி ஈரத்தை துடைத்து எடுக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், ஓமம் மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணை விட்டு நன்கு காயவிடவும்.
  4. எண்ணெய் காய்ந்ததும் கற்பூரவல்லி இலையை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
  5. அதனை திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  6. மொறு மொறுவென்று சூப்பராக இருக்கும். தொட்டுக் கொள்ள சட்னி வைத்து சூடாக பரிமாறவும்.
  7. சூடாக சாப்பிட்டால் மொறு மொறு என சுவையாக இருக்கும். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்பார்கள்.