வெயிலுக்கு இதமா சுவையான சப்போட்டா பழம் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

Summary: சப்போட்டா மில்க் ஷேக் இது தாகத்தோடு ஓரளவு பசியையும் தணிக்க கூடிய அருமையான குளிர் பானம் இது. இப்பொழுது சம்மர் சீசன் என்பதால் ஜில்லுனு ஏதாவதும் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். அதனால் இது போன்று சப்போட்டா மில்க் ஷேக் செய்து குடித்து பாருங்க அருமையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 5 பழுத்த சப்போட்டா பழம்
  • 2 டம்பளர் பால்
  • 5 டேபிள் ஸ்பூன் சீனி
  • 5 ஐஸ் கட்டிகள்

Equipemnts:

  • மிக்ஸி

Steps:

  1. முதலில் பாலை நன்கு காய்த்து ஆறவிடவும்.
  2. முதலில் சப்போட்டா பழத்தை தோல் நீக்கி அதன் கொட்டைகளையும் நீக்கி மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு அத்துடன் சர்க்கரை, காய்ச்சிய பால் ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  4. பிறகு ஐஸ் கட்டிகளை சேர்த்து 1 நிமிடம் அரைத்து சில்லென்று பரிமாறவும்.