ருசியான அகத்திப்பூ பிரியாணி ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: சாலையோரங்களில் பிரியாணி கடைகள் வரிசைக்கட்டி இருந்தாலும் கூட எல்லா கடையிலும் கூட்டம் குவியும். தமிழர்களின் வாழ்வியலுடன் பிரியாணி கலந்து விட்டது. நம்மில் பலருக்கும், உயிரினும் மேலாக இருக்கும் பிரியாணி பலவகைப்படும். ஆம்பூர் பிரியாணி தொடங்கி ஹைதராபாத் பிரியாணி, கல்கத்தா பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, சிந்தி பிரியாணி என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வீட்டில் பிரியாணி செய்யும்போது, சில நேரம் குழைந்து போகலாம். எனவே குழையாமல் குக்கரில் அகத்திப்பூ பிரியாணி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் அகத்திக்கீரை
  • 2 டம்ளர் அரிசி
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 தக்காளி
  • 20 சின்ன வெங்காயம்
  • 2 கீரிய பச்சை மிளகாய்
  • 4 டீஸ்பூன் நநெய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 துண்டு பட்டை
  • 4 கிராம்பு
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1 பிரியாணி
  • 4 ஏலக்காய்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

Steps:

  1. குக்கரில் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும் பின்பு பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  2. பின்பு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் 2 பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  4. தக்காளியுடன் சிறிது புதினா இலை கொத்தமல்லி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. வெங்காயம், இஞ்சி பூண்டு நன்கு வதங்கியவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  6. பின்பு அகத்திப்பூ சேர்த்து சேர்த்து சிறிது நேரம் வதக்கி இரண்டு டம்ளர் அரிசிக்கு 5 டம்ப்ளர் தண்ணீர் என்ற வீதம் ஊற்றி கொதிக்க விடவும்.
  7. தண்ணீர் கொதித்து அரிசி சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை கிளறி விடவும். மீதம் உள்ள நெய்யை சேர்த்து சிறிது புதினா இலை சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
  8. அவ்வளவு தான் சுவையான அகத்திப்பூ பிரியாணி ரெடி. சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.