ருசியான சீஸ் ஆம்லெட் ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Summary: குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இது போன்று சீஸ் ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 4 முட்டை
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 45 கிராம் சீஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • மிளகு தூள்
  • உப்பு
  • 2 பச்சை மிளகாய்

Equipemnts:

  • தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்
  2. அடுத்து முட்டையுடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் மிளகு தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து பரவலாக எண்ணெய் தடவி முட்டை கலவையை அதில் ஊற்றி, மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.
  4. முட்டை வெந்ததும் அதன் ஒரு பாத்தில் மட்டும் துருவிய சீஸை போட்டு 1 நிமிடம் வேக விடவும்.
  5. சீஸ் உருகியதும் மறுபதியால் மூடி பரிமாறவும்.