ருசியான முட்டை மோமோஸ் வீட்டில் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் ருசியே தனி தான்!

Summary: குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்தவுடனே என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம்னு யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது இதுபோன்று ஒரு முறை எக் மோமோஸ் செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

Ingredients:

  • 2 முட்டை
  • 1 கப் மைதா மாவு
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 வெங்காயம்
  • ½ ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ ஸ்பூன் மிளகு தூள்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் முட்டையை நன்கு வேகவைத்து தோலுரித்துக்கொள்ளவும். பிறகு அதனை துருவிக்கொள்ளவும்.
  2. அடுத்து மைதாமாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அத்துடன் கொஞ்சம் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் . வதக்கும் பொழுது அத்துடன் மிளகாய் தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. மசாலா வாசனை போனதும் துருவி வைத்துள்ள முட்டையை சேர்த்து முட்டை வாசனை போக கிளறி விடவும். பிறகு அடுப்பை அணைக்கவும்.
  6. அடுத்து பிசைந்து வைத்துள்ள மைதா மாவை வட்டமாக தேய்த்து நடுவில் செய்து வைத்துள்ள முட்டை கலவையை வைத்து மோமோ வடிவில் மடித்து வைத்துக்கொள்ளவும். இதுபோன்று எல்லா மாவையும் செய்து இட்லி பாத்திரத்தில் வேக விட்டு பரிமாறவும்.