பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு சுவையான பச்சைப்பயறு கட்லெட் இப்படி செய்து பாருங்க!

Summary: ஒவ்வொரு அம்மாக்களும் பெரும்பாலும் ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பங்களைத் தேடுகிறார்கள். அதிக சிற்றுண்டி விருப்பங்கள் இருந்தாலும், உங்கள் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் உணவில் பச்சைப்பயறு மிகவும் அவசியம். உங்கள் குழந்தைகளின் உணவில் பச்சைப்பயறு சேர்க்க இது ஒரு சிறந்த செய்முறையாகும். எனவே முயற்சி செய்து பாருங்கள்.

Ingredients:

  • 100 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கு
  • 50 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி
  • உப்பு
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. பச்சைப்பயறை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு இதை வேகவைத்து மசிக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசிக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் மசித்த பச்சைப்பயறு, உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசையவும்.
  4. இதில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
  5. இதை சிறு சிறு உருண்டைகளாக்கி, விருப்பமான வடிவத்தில் தட்டி வைக்கவும்.
  6. தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து சூடானதும், தட்டிய கட்லெட்டைச் சேர்த்து இருபுறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.