தேவாமிர்தம் போல் சுவையான ஆப்பம் செய்வது எப்படி ?

Summary: நீங்கள் வீட்டிலேயே இனி ஆப்பம் செய்து சாப்பிடலாம் எளிமையான முறையில் மாவு தயார் செய்யலாம். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆப்பம் செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆப்பம் படித்த உணவாக மாறிவிடும். இன்று தேவாமிர்தம் போல் சுவையான ஆப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் பச்சரிசி
  • ½ கப் துருவிய தேங்காய்
  • ¼ கப் வடித்த சாதம்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 ஆப்ப கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஆப்பம் மாவு தயார் செய்ய வேண்டும் முடிந்தவரை இரவு பொழுதில் மாவு தயார் செய்து கொள்ளுங்கள் அப்பொழுது தான் மறு நாள் காலை ஆப்பம் செய்து சாப்பிடுவதற்கு சரியாக இருக்கும்.
  2. முதலில் கொடுத்துள்ள அளவில் பச்சரிசியை ஒரு பெரிய பவுலில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரங்கள் நன்கு ஊற வையுங்கள். பின்பு பச்சரிசி நன்கு கூறியதும் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  3. அதன் பின் வடிகட்டிய பச்சரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளுங்கள். மாவு அரைத்து முடித்தவுடன் கடாயை அடுப்பில் வைத்து நாம் அரைத்த பச்சரிசி மாவில் இருந்து இரண்டு குழி கரண்டி அளவு மாவு எடுத்து கடாயில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  4. பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பசை போன்று பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். மாவு பசை போன்ற பதத்திற்கு வந்தவுடன் கடாய் இறக்கி ஆற வைத்து விடுங்கள்.
  5. பின்பு மிக்ஸியில் மீதி இருக்கும் மாவில் தேவையான அளவு உப்பு, துருவிய தேங்காய், வடித்த சாதம் மற்றும் பசை போல் தயார் செய்து உள்ள மாவு போன்ற பொருட்கள் எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மை போல அரைத்து கொள்ளவும்.
  6. பின் அரைத்த மாவை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி எட்டு மணி நேரங்கள் புளிக்க வைக்க வேண்டும். நீங்கள் இரவு மாவு தயார் செய்து வைத்தால் காலையில் ஆப்பம் சுடலாம்.
  7. பின்பு மாவு புளித்ததும் காலையில் ஆப்பம் சுட குழி இருக்கும் கடாயை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி கடாயை கையில் எடுத்து ஒரு சுற்று சுற்றி ஆப்பத்தை சுட வேண்டும் அதன் பின் மூடி வைத்து விடுங்கள்.
  8. பின் சிறிது நேரம் கழித்து ஆப்பம் வெந்ததும் எடுத்து விடுங்கள். இப்படியாக மீதி இருக்கும் மாவையும் ஊற்றி ஆப்பம் தயார் செய்து கொள்ளவும். இதனுடன் நீங்கள் தேங்காய் பால் சேர்த்து சாப்பிடும் பொழுது தேவாமிர்தம் போல் இருக்கும். அவ்வளவுதான் ஆப்பம் இனிதே தயாராகிவிட்டது.