ருசியான தேங்காய் சாதம் இனி இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

Summary: குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் லஞ்சுக்கு என்ன சாதம் செய்து கொடுக்கலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ உங்களுக்கான பதிவு தான். யோசிக்காமல் சட்டுனு தேங்காய் சாதம் செய்து கொடுத்து பாருங்க யாரும் வேண்டாம் என்று சொல்லாமல் எல்லா சாதத்தையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாங்க. ஏனென்றால் இந்த சாதம் அவ்வளவு சுவையாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த தேங்காய் சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 தேங்காய்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 ஸ்பூன் கடலை பருப்பு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • ¼ டீஸ்பூன் பெருங்காயப்பொடி
  • கருவேப்பிலை
  • உப்பு
  • வடித்த சாதம்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் உதிரி உதிரியாக சாதத்தை வடித்துக்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சேர்த்து பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், சேர்த்து பொன்னிறமாக நிறம் மாறியதும். அதில் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காய பொடி, கருவேப்பிலை, கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கொஞ்சம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
  4. அடுத்து வடித்த சாதத்தில் சேர்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.