அடிக்கிற வெயிலுக்கு இதமா கிர்ணி பழ ஸ்மூத்தி இப்படி செய்து பாருங்க! உடல் சூட்டை தனிக்கும்!

Summary: முலாம்பழம் கோடையில் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகும். கோடையில் உங்கள் தாகத்தைத் தணித்து, உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உங்களுக்கு வழங்கும். கோடை காலம் வந்துவிட்டது. அதுபோலவே சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் நீரிழப்பு. இதனால்தான் உடலை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, இழந்த நீருக்குப் பதிலாக வீட்டிலே கிர்ணி பழம் ஸ்மூத்தி செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் .

Ingredients:

  • 1 கிர்ணி
  • 1 கப் பால்
  • 2 டீஸ்பூன் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
  • 1/4 கப் ஐஸஐஸ் கட்டிகள்
  • 1 கப் ஐஸ்கிரீம்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. கிர்ணி பழம் ஒற்றை கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  2. பின்னர் அதன் தோல் மற்றும் விதையை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி குளிர்விக்கவும்.
  4. ஒரு மிக்ஸியில் நறுக்கிய கிர்ணி பழம் துண்டுகள், சர்க்கரை மற்றும் சிறிது பால் சேர்த்து அரைக்கவும்.
  5. ஐஸ் கட்டிகள், ஐஸ்கிரீம் மற்றும் மீதமுள்ள பால் கலவையை மென்மையான மற்றும் நுரை வரும் வரை சேர்க்கவும்.
  6. அதில் ஏலக்காய் பொடி சிறிது சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான கிர்ணி பழம் ஸ்மூத்தி ரெடி.