அசத்தலான ருசியில் கோபி புலாவ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதற்கு முன் இப்படி ருசியில் சாப்பிட்டு இருக்க மாட்டிங்க!

Summary: குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. மதிய உணவிற்கு கோபி புலாவ் இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க. மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 காலிப்ளவர்
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 அண்ணாச்சி பூ
  • 2 பிரிஞ்சி இலை
  • புதினா
  • கொத்தமல்லி
  • உப்பு

Equipemnts:

  • குக்கர்

Steps:

  1. முதலில் குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ, பிரிஞ்சி இலை, சேர்க்கவும்.
  2. அவை பொரிந்து வரும்போது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, புதினா சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு காலிபிளவர் சேர்த்து மெதுவாக வதக்கவும்.
  4. அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து , 1½ கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
  5. தண்ணீர் கொதித்ததும் அரிசி சேர்த்து சிறிது நேரம் விடவும்.
  6. கொதி நன்கு வரும் பொழுது அதன் மேல் கொத்தமல்லி இலை சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வரவரை வேகவிட்டு இறக்கவும்.