ருசியான வெங்காயதாள் கூட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்றது!

Summary: மதிய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள என்ன பொரியல், அல்லது கூட்டு செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இது போன்று வெங்காயத்தாள் கூட்டு செய்து சாப்பிட்டு பாருங்க ஹோட்டல் சுவையை மிஞ்சி அட்டகாசமான டேஸ்டில் இருக்கும். எப்படி இந்த கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 கப் வெங்காயத்தாள்
  • 50 கிராம் கடலை பருப்பு
  • 1 தக்காளி
  • 1 வெங்காயம்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் சீரக தூள்
  • 4 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • உப்பு
  • எண்ணெய்
  • 7 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள், சீரக தூள், சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சேர்த்து பொரிந்ததும், உளுத்தம் பருப்பு, சீரகம், பூண்டு, வர மிளகாய் சேர்த்து நன்கு தாளிக்கவும்.
  3. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
  4. பின் வெங்காய தாளை சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காய தாள் வெந்ததும் வேக வைத்த கடலை பருப்பு, தக்காளியை இதில் சேர்த்து 3 நிமிடம் வதக்கிய பின் இறக்கவும்.